1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (06:32 IST)

பிக்பாஸ் குறித்த ஆய்வில் ஓவியாவுக்கு முதலிடம்

தமிழக மக்கள் பெரும்பாலானோர்களை கவர்ந்த பிக்பாஸ், ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் டல்லடித்துள்ள நிலையில் பிக்பாஸ் குறித்து முன்னணி ஆய்வுக்குழு ஒன்று ஆய்வு நடத்தி அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவு பின்வருமாறு:



 
 
பிக்பாஸ் குறித்து அதிகம் பேசப்படுவது ஃபேஸ்புக்கில்தான். இதற்காக ஃபேஸ்புக்கில் 100 பக்கங்களுக்கும் மேல் உள்ளது. ஃபேஸ்புக்கை அடுத்து டுவிட்டரில் அதிகம் பேசப்படுகிறது
 
பிக்பாஸ் குறித்து தினமும் சமூக வலைத்தளங்களில் மட்டும் 5.3 பேர் பேசுகின்றனர். இவர்களில் பெரும்பாலும் இன்னும் ஓவியா குறித்தே பேசி வருகின்றனர்.
 
ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் சுமார் 25% குறைந்துவிட்டனர். இது இன்னும் கணிசமான அளவில் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
 
பிக்பாஸ் ஹீரோ ஓவியாதான். அதில் மாற்றமே இல்லை. அதேபோல் காயத்ரி மற்றும் சக்தி இருவருமே வில்லன்கள்
 
கமல்ஹாசன் சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் நடுநிலைமை அவரிடம் இல்லை. 
 
பிக்பாஸ் தரப்பில் இருந்து ஓவியாவுக்கு அநீதியே இழைக்கப்படுகிறது. ஓவியாவுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்குகள் முரண்பட்டவை
 
மேலும் பெரும்பாலானோர் இது இன்னும் ஸ்கிரிப்ட் என்றே நம்புகின்றனர். பங்கேற்பாளர்கள் ஏற்கனவே சொல்லிக்கொடுத்த வசனத்தைத்தான் பேசுகின்றனர்.
 
ஆரவ் மேல் ரசிகர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. ஓவியாவுக்கு அவர் செய்தது துரோகம் என்றே பலர் கருதுகின்றனர். அதேபோல் ஓவியாவின் வெளியேற்றத்திற்கு அடிப்படை காரணம் ஜூலியும் ஒருவர்
 
இவ்வாறு அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது