புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (16:10 IST)

பிக்பாஸ் - சீசன் 5 ஒளிபரப்பாகும் தேதி அறிவிப்பு

சீரியல் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக ஒளிப்பரப்பானது பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சிக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 4 சீசன்களும் மக்களிடம் நல்லவரவேற்பைப் பெற்றதுபோல் அடுத்ததாக ஒளிபரப்பாகவுள்ள சீசன் 5 பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இதில், பிக்பாஸ் சிசன் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகிவரும் நிலையில் போட்டியாளர்களுடன் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனக் கூறப்பட்டுள்ளது.