கலைஞர் டிவியில் விஜேவான ‘பிக் பாஸ்’ ஜூலி
‘பிக் பாஸ்’ ஜூலி, கலைஞர் டிவியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறார்.
தமிழகத்தை உலுக்கிய ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஜூலி, விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் பொய்யாக நடந்து கொண்டதாலும், பொய் பேசியதாலும், ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்தவர்கள் முதற்கொண்டு யாருக்கும் அவரைப் பிடிக்கவில்லை.
‘விஜே ஆகவேண்டும்’ என்பது தன்னுடைய விருப்பம் எனத் தெரிவித்திருந்தார் ஜூலி. இந்நிலையில், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியின் 6வது சீஸனைத் தொகுத்து வழங்குகிறார் ஜூலி. கலா மாஸ்டர் மற்றும் கோகுல் நடுவராகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. தினமும் இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கலாம்.