ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 28 ஜூன் 2017 (22:18 IST)

நள்ளிரவில் ஜூலியை கட்டிப்பிடித்தது யார்? பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு

ஜல்லிக்கட்டு போராளி ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாள் தன்னை யாரும் கட்டிப்பிடிக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இதை நெட்டிசன்கள் கலாய்த்ததும் தெரிந்ததே



 
 
இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி நள்ளிரவு 12 மணிக்கு தூங்கி கொண்டிருந்தபோது திடீரென பிக்பாஸ் குடும்பத்தினர் ஜூலி முன் நின்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினர். மேலும் அனைவரும் ஜூலியை கட்டிப்பிடித்து தங்களுடைய வாழ்த்துக்களை கூறினர்.
 
ஜூலிக்கு உண்மையிலேயே ஒரு புதிய அனுபவமாகத்தான் இருந்திருக்கும். ஜூலியும் அனைவரையும் கட்டிப்பிடித்து அவர்களுக்கு நன்றி கூறினார்