செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (22:17 IST)

படப்பிடிப்பின்போது நழுவிய நடிகையின் துண்டு: தயாரிப்பாளர் கைது

படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக நடிகையின் துண்டு விலகியதால், அந்த படத்தின் தயாரிப்பாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்

போஜ்புரி தயாரிப்பாளர் உபேந்திரவர்மா என்பவர் தயாரித்த குறும்படம் ஒன்றில் பிரபல நடிகை ஒருவர் துண்டுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.

இந்த படப்பிடிப்பின்போது திடீரென நடிகையின் துண்டு நழுவியது. இதனால் துண்டு நழுவிய காட்சியை நீக்கும்படி நடிகை தயாரிப்பாளரை கேட்டுக்கொண்டார். அந்த காட்சியை நீக்கிவிடுவதாக வாக்குறுதி கொடுத்த தயாரிப்பாளர், பின்னர் அந்த காட்சியை மட்டும் தனியாக எடுத்து யூடியூபில் பதிவேற்றிவிட்டார்.

இந்த காட்சி யூடியூபில் வைரலாகியதால் அதிர்ச்சி அடைந்த நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையின் அந்த தயாரிப்பாளர் உபேந்திரவர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். யூடியூபில் இருந்த அந்த வீடியோவும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.