திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2024 (17:59 IST)

சென்னை வந்தது பவதாரிணி உடல்.. நாளை தேனி பண்ணைபுரத்தில் இறுதிச்சடங்கு..!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று காலமான நிலையில் அவரது உடல் இலங்கையில இருந்து சற்று முன்னர் சென்னை வந்துள்ளது. 
 
இதனை அடுத்து சென்னையில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் தற்போது பொதுமக்கள் அஞ்சலைக்காக வைக்கப்பட்டுள்ளது. ’
 
இந்த நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று பவதாரிணி உடலுக்கு அஞ்சல் செலுத்தி வருகின்றனர். 
 
இந்த நிலையில் நாளை பவதாரிணி உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் இறுதிசடங்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் இன்று விடிய விடிய பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva