முதல் மரியாதை சிவாஜியாக மாறிய பாரதிராஜா
இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜா, தான் இயக்கி நடித்துவரும் படத்தில் முதல் மரியாதை சிவாஜிக்கு இணையாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாராம்.
இயக்குநர் பாலச்சந்தரோடு இணைந்து, தாமிரா இயக்கிய ‘ரெட்டச்சுழி’ படத்தில் நடித்தார் பாரதிராஜா. அதன்பிறகு, சுசீந்திரன் இயக்கிய ‘பாண்டிய நாடு’ படத்தில், விஷாலுக்குத் தந்தையாக நடித்தார். அந்தப் படத்தில் பாரதிராஜாவுக்கு கிடைத்த நல்ல பெயரால், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது, ‘குரங்கு பொம்மை’, ‘படைவீரன்’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் பாரதிராஜா.
அத்துடன், ‘ஓம்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்து, அந்தப் படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். முதியவர் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. ‘முதல் மரியாதை’ சிவாஜி அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாராம் பாரதிராஜா. 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், பாடல் காட்சிகளைப் படமாக்குவதற்காக கேரளா செல்கின்றனர்.