புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (07:41 IST)

ஒரே போஸ்டரால் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்த இயக்குனர் – பாரதிராஜா பாராட்டு!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணிகாயிதம் எனும் படத்தின் போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று முன் தினம் மாலை இயக்குனர் செல்வராகவன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் சாணி காயிதம் எனும் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். அதில் புது அவதாரம் என்று குறிப்பிட்டு இருந்த அவர், அந்த படத்தில் நடிக்கபோவதை அறிவித்தார். இது ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் அந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த போஸ்டர் சமூகவலைதளங்கள் எங்கும் கவனம் ஈர்க்க அதன் இயக்குனர் அருண் மாதேஸ்வரனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையடுத்து அந்த இயக்குனரின் முதல் படமான ராக்கியில் நடித்துள்ள இயக்குனர் இமயம் பாரதிராஜா, தனது சமூகவலைதள பக்கத்தில்

’ராக்கி தமிழ் சினிமாவில் ஒரு western movie.
திரைக்கு வருமுன்
இளம் படைப்பாளி
அருண் மாதேஷ்வரனின்
அடுத்த படைப்பு
சாணிக் காயிதம்
சாமானியனின்
போர்க்களமாக
இருக்கப் போவது
நிதர்சனம்.
வாழ்த்துக்கள்
அன்புடன்
பாரதிராஜா.’ எனத் தெரிவித்துள்ளார்.