இளைய தளபதி விஜய் விக் வைத்ததன் ரகசியம்?
பைரவா படத்தில் இளைய தளபதி விஜய்யின் விக் குறித்த ரகசியத்தை படத்தின் ஒளிப்பதிவாளர் கூறியுள்ளார்.
பைரவா படத்தில் விஜய்யின் ஸ்டைல் பட்டைய கிளப்பும் என்று படகுழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் டிரைலர் பார்த்த அனைவரும் பேசுவது விஜய்யின் விக் பற்றிதான்.
விஜய் ஏன் விக் வைத்தார் என்ற ரகசியத்தை படத்தின் ஒளிப்பதிவாளர் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
தெறி படத்தில் மிகவும் ஷார்ட்டாக வெட்டிய ஒரே காரணத்தால், இந்த படத்தில் விக் வைக்கப்பட்டது. உடனே படப்பிடிப்பு செல்ல வேண்டிய கட்டாயம், மேலும், பலரும் ஏன் இந்த விக் தேர்வு செய்தீர்கள் என்று கேட்கிறார்கள்.
படத்தில் சண்டைக்காட்சிகளில் முடியை கோதிவிடுவது போல சில காட்சிகள் இருக்கின்றது, அதற்காகவே இப்படி ஒரு விக் தேர்வு செய்தோம், என்று கூறியுள்ளார்.