திங்கள், 20 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 6 பிப்ரவரி 2015 (18:18 IST)

பாகுபலி படத்தின் 30 நிமிடக் காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு

எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலி படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுத்து வருகிறார். தமிழில் இப்படம் மகாபலி என்ற பெயரில் வெளியாக உள்ளது.
சரித்திரப் படமான இதில் பிரபாஸ், அனுஷ்கா, ஸ்ரீதேவி, ராணா, தமன்னா உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் இதுதான் இதுவரை வெளியான படங்களில் மிகப்பிரமாண்ட படம் என்கிறார்கள்.
 
பலநூறு பேரின் உழைப்பில் வருடக்கணக்கில் தயாராகி வரும் இந்தப் படத்தின் 30 நிமிடக் காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்திலிருந்து இந்தக் காட்சிகள் திருடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
 
இது குறித்து சைபர் க்ரைமில் புகார் தரப்பட்டு, தற்போது விசாரணை நடந்து வருகிறது.