திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2020 (09:37 IST)

பேபி நம்பர் 3 ஆன் தி வே... புகைப்படத்துடன் வெளியிட்ட செல்வராகவன் மனைவி!

சினிமாவை நேசிக்கும் வெற்றி இயக்குனராக செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி துள்ளுவதோ இளமை, புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி , யாரடி நீ மோகினி , மயக்கம் என்ன உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

7G ரெயின்போ காலனி படத்தின் மூலம் திரையுலகில் தான் அறிமுகப்படுத்திய நடிகை சோனியா அகர்வால் காதலித்து கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதையடுத்து செல்வராகவன் கீதாஞ்சலி என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டார்.

கீதாஞ்சலி, செல்வராகவன் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக கரப்பாகியுள்ளதாக புகைப்படத்துடன் உறுதிப்படுத்தாத ,தகவல் அண்மையில் வெளியாகி வைரலானது. இதையடுத்து சற்றுமுன் கீதாஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் மூன்றாவது முறை கர்ப்பமாக இருப்பதை தெரிவித்து வருகிற ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.