மீண்டும் தள்ளிப் போகிறதா அயலான் திரைப்படம்? லேட்டஸ்ட் தகவல்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. இப்போது 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது மீண்டும் ரிலீஸ் தள்ளிப் போய் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. படத்தின் கிராபிக்ஸ் மற்றும் வி எஃப் எக்ஸ் பணிகள் இன்னும் முடியாததால் இந்த தாமதம் என சொல்லப்படுகிறது.