கிளாமர் போட்டோ ஷூட்... கில்மா போஸ் - கவர்ச்சி பாப்பாவாக அதுல்யா!
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் குட்டியான பாவடை ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து கவர்ச்சி குயின் போன்று போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளது.