1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2017 (13:00 IST)

விமான நிலையத்தில் போதை பொருள் சோதனை; பிரபல இசையமைப்பாளர் வேதனை

தமிழ் சினிமாவில் அறியப்பட்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் ஒரு சில படங்களில் மூலம் மிக விரைவில் பிரபலமான இசையமைப்பாளராக அனைவராலும் அறியப்பட்டவர். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம்  உள்ளிட்ட மொழிப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

 
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சிக்காக நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி  நகருக்குச் சென்றுள்ளார் சந்தோஷ் நாராயணன்.  இவர் தோற்றத்தைப் பார்த்து ஆஸ்திரேலிய விமான அதிகாரிகள் இவர் போதை மருந்து கடத்தி வந்திருப்பதாக சந்தேகப்பட்டு, தனியாக அழைத்து சோதனை செய்துள்ளனர்.

 
இது குறித்து கூறிய சந்தோஷ் நாராயணன், இப்படி எட்டாவது முறையாக தனக்கு சோதனை நடப்பதாகவும், சோதனையின்போது ஒரு போலீஸ்காரர் தன்னிடம் மிக கடுமையாக நடந்து கொண்டாதாகவும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதே போல ஒருவரின் தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடவேண்டாம் என்றும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.