பாதியில் நிறுத்தப்பட்ட "அசுரன்" ரீமேக்...!
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளி என புகழப்படும் இயக்குனர் வெற்றிமாறன் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு தனுஷை வைத்து "அசுரன்" படத்தை இயக்கியிருந்தார். கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியான இப்படம் சுமார் 100 நாட்களை தாண்டி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது.
இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது பாக்ஸ் ஆபீஸில் ரெக்கார்டை பதிவு செய்தது. தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சுவாரியர்...நீயா? நானா? ஒரு கை பார்த்திடுவோம் என போட்டிபோட்டுக்கொண்டு நடித்தது போல் இருந்தது அவரது நடிப்பு. இப்படத்தின் அசுர வசூலை பிற மாநில திரைத்துறையினர். இப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தனர்.
அந்த வகையில் தற்போது இப்படத்தை தெலுங்கில் ஸ்ரீகாந்த் அடாலா இயக்குகிறார். நடிகர் வெங்கடேஷ் டகுபதி ஹீரோவாக நடிக்கிறார். நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி இணையத்தை ஒட்டுமொத்தமாக திசை திருப்பியது. கதாநாயகியாக ப்ரியாமணி நடிக்கும் இப்படத்தின் டைட்டில் "நாரப்பா" என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தற்போது ஹைதராபாத் திரும்பியுள்ளதாகவும் சுரேஷ் ப்ரோடக்ஷன்ஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.