வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஜூலை 2024 (17:54 IST)

எது நடக்கப்போவது என்று நினைத்தேனோ அது இப்ப நடக்க போகுது: ‘டிமாண்டி காலனி 2’ டிரைலர்..!

அருள்நிதி நடிப்பில், அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவான டிமான்டி காலனி என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 
டிமான்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
முதல் பாகத்தில் செயின் ஒன்று டிமான்டி காலனி வீட்டில் சிக்கிக் கொள்ள அந்த செயினால் ஏற்படும் விபரீதம் உள்பட பல காட்சிகள் இரண்டாம் பாகத்தில் டிரைலரில் உள்ளன. சர்வதேச தரத்துடன் த்ரில் காட்சிகள் கிராபிக்ஸ் காட்சிகள் அடங்கியுள்ள இந்த ட்ரைலரை பார்க்கும்போதே நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த அருள்நிதி உடன் இரண்டாம் பாகத்தில் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் பாகம் போலவே இரண்டாவது பாகம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran