வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (14:18 IST)

பத்மாவதி வெளிவந்தால் பாஜகவினர் முட்டாள்கள் என்பது தெரியும் - பிரபல பத்திரிகையாளர்

பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கார்னி சேனா அமைப்பினர் படம் வெளிவந்த பின்னர் முற்றிலும் முட்டாள்களாக பார்க்கப்படுவார்கள் என பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.


 
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கித்தில் உருவாகியுள்ள பத்வாமதி திரைப்படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளனர் என்றும் இந்த திரைப்படம் வெளிவந்தால் கலவரம் ஏற்படும் என்றும் கூறி இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என கார்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
தீபிகா தலையை வெட்டி கொண்டு வந்தால் ரூ.5 கோடி பரிசு என ஹரினாயா மாநில பாஜக தலைவர் கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். உத்திரபிரதேச மாநிலத்தில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தெலங்கானா மாநிலத்தில் பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில் பத்மாவதி படக்குழுவினர் சிறப்பு திரையிடல் செய்தனர். இதற்கு பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்ப்பு விடுக்கப்பட்டது. அதில் பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
 
படத்தை பார்த்த அர்னாப் கோஸ்வாமி அவரது சேனலில் திரைப்படம் குறித்து பேசினார். திரைப்படம் குறித்து அவர் கூறியதாவது:-
 
எங்களுக்கு திரையிடப்பட்டதுதான் திரையரங்கில் வெளிவரும். ராஜ்புத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த திரைப்படம் அமையும். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் பத்மாவதி ராணியின் பெருமையை பேசுகிறது. அலாவுதீனும், பத்மாவதியும் படத்தின் ஒரு காட்சியில் கூட ஒன்றாக வருவதில்லை. 
 
படம் திரையரங்கில் வெளியான பின் கார்னி சேனா அமைப்பினர் முற்றிலும் முட்டாள்களாக பார்க்கப்படுவார்கள். ஆசிட் வீசுவேன் என அச்சுறுத்துபவர்கள் நாடு கடந்து கேலி செய்யப்படுவார்கள். ராஜா ராணாவுக்கும் ராணி பத்மாவதிக்கும் இடையே உள்ள காதல் காட்சியில் கூட ஆபாசம் இல்லை. படத்தில் வரும் ஒரு காட்சிக்கு கூட சென்சார் கட் தேவையில்லை. காரினி சேனா அமைப்பினரின் எதிர்ப்பு தவறு என்பதை பத்மாவதி அதன் பெருமையோடு நிரூபிக்கும்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.