150வது படத்தைத் தொட்ட அர்ஜுன்
‘ஆக்ஷன் கிங்’ என்று போற்றப்படும் அர்ஜுன், தன்னுடைய 150வது படத்தைத் தொட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன். கன்னடப் படங்களின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர், ‘நன்றி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், ஷங்கரின் ‘ஜெண்டில்மேன்’ அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது. அந்தப் படத்திற்காக, சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது பெற்றார்.
கிட்டத்தட்ட 40 வருடங்களை சினிமாவில் தொடப்போகும் அர்ஜுன், தன்னுடைய 150வது படத்தில் நடித்துள்ளார். அருண் வைத்யநாதன் இயக்கியுள்ள ‘நிபுணன்’ படம்தான் அது. ஃபேஷன் ஸ்டுடியோ சார்பில், அருண் வைத்யநாதனே தன் நண்பர்களுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். பிரசன்னா, வரலட்சுமி, சுஹாசினி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.