வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 2 ஜூலை 2017 (17:46 IST)

ரஜினியை விமர்சித்தால் வழக்கு தொடருவேன்; அர்ஜூன் சம்பத் வார்னிங்

ரஜினிகாந்த பற்றி தொடரந்து அவதூறு பரப்பினால் வழக்கு தொடருவேன் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 

 
ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார். முதலில் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதுதான் நல்லது என கூறினார். அதைத்தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 
 
இதற்கு அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார். ரஜினிகாந்த் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பினால் வழக்கு தொடர்வேன் என்றார். இதன்மூலம் அர்ஜூன் சம்பத், சுப்பிரமணியன் சுவாமியை எச்சரித்துள்ளார்.