இந்த வேகத்தை கொஞ்சம் இதிலும் காட்டுங்களேன்! மத்திய அரசுக்கு அரவிந்தசாமி அறிவுரை
கடந்த வாரம் மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வரும் சட்டத்தை அறிவித்தது. இதற்கு கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மக்களின் உணவு சுதந்திரத்தை மத்திய அரசு பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின.
இந்த நிலையில் இதுகுறித்து ஒருசில சினிமா பிரபலங்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சித்தார்த் தனது டுவிட்டரில் இதுகுறித்து காரசாரமாக கருத்துக்களை பதிவு செய்திருக்கும் நிலையில் தற்போது பிரபல நடிகர் அரவிந்தசாமியும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்/.
அரவிந்தசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: "உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள், அதிகளவு இருக்கும் நாட்டில் இந்தியாவும் ஒன்று. ஆனால், நாம் இன்னும் மேஜையின் மீதுள்ள உணவுகளைப் பறிக்கும் வேலையைத்தான் செய்து வருகிறோம். இதே ஆற்றலை மக்களுக்கு உணவு அளிப்பதிலும் காட்டுங்கள். அதைத்தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன" என்று கூறியுள்ளார்.