திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (18:35 IST)

’நெற்றிக்கண்’ ரீமேக்கில் அனுஷ்கா!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’நெற்றிக்கண்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே என்ற கொரிய மொழி படத்தின் ரீமேக் என்ற நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா கேரக்டரில் நடிக்க ஒரு சில நடிகைகள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அனுஷ்கா இந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
நயன்தாரா கேரக்டரில் அனுஷ்கா நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக தெரிகிறது