திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (19:57 IST)

அறிவுஜீவிகள் ரிவ்யூ எழுதுகிறார்கள், பாமர மக்கள் படம் பார்க்கின்றார்கள்: அண்ணாத்த குறித்து விநியோகிஸ்தர்

அறிவுஜீவிகள் ரிவ்யூ எழுதுகிறார்கள் என்றால் பாமர மக்கள் படம் பார்க்கிறார்கள் என்றும் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் கூறியுள்ளார் 
 
அண்ணாத்த படம் வெளியானதிலிருந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பது குறித்து கூறிய திருப்பூர் சுப்பிரமணியம், ‘விமர்சனம் எழுதுவார்கள் என அனைவருமே அறிவுஜீவித்தனமான எழுதுகிறார்கள் என்றும் ஆனால் அண்ணாத்த திரைப்படம் குடும்ப சென்டிமென்ட் கலந்த படம் என்பதால் பெண்கள் குடும்பங்கள் என கூட்டமாக படம் பார்க்க வருகிறார்கள் என்றும் படத்தின் வசூல் மிகவும் அபாரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மழை காரணமாக தான் படத்தின் வசூல் சற்று குறைந்து உள்ளதாகவும் ஆனால் இந்த படம் பொதுமக்களுக்கு பிடித்த படமாக இருக்கிறது என்றும் அறிவுஜீவிகள் எழுதும் விமர்சனத்தை பொதுமக்கள் கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்