அண்ணாத்த படத்தின் மொத்த வசூல்… 15 கோடி நஷ்டம் என கணிப்பு!
அண்ணாத்த படத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு 10 முதல் 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு சோலோவாக தீபாவளிக்குக் களமிறங்கியது. ஆனால் படத்தின் மோசமான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்கள் வருகைக் குறைய ஆரம்பித்தது. கொஞ்சம் நஞ்சம் வந்து கொண்டிருந்த ரசிகர்களையும் கடந்த வாரம் பெயத கனமழை சுத்தமாக நிறுத்தியது. ஆனாலும் பட நிறுவனம் மிகப்பெரிய வெற்றி என்பது போல் காட்டிக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் சினிமா வியாபாரம் குறித்து தொடர்ந்து பேசிவரும் பத்திரிக்கையாளர் பிஸ்மி வெளியிட்டுள்ள தகவலின் படி அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகள் மூலமாக மொத்தமாக 72 கோடி ரூபாயும், ஒட்டுமொத்தமாக சுமார் 169 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளதாம். ஆனால் படத்தின் செலவீனங்கள் 182 கோடி ரூபாய்க்கும் மேல் என சொல்லப்படுகிறது. அதனால் கிட்டத்தட்ட 10 முதல் 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.