வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 13 பிப்ரவரி 2021 (16:22 IST)

விஜய் சேதுபதி ரிலீஸ் செய்த அனிருத்தின் புதிய போஸ்டர் !

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் அனிருத் இசையமைத்துள்ள பாடல் நாளை ரிலீசாகவுள்ள நிலையில் அனிருத் பியானோவில் இசையமைப்பது போன்ற ஒரு புதிய புகைப்படத்தை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்

இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது

அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலை அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பாடலின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
.
இரண்டு காதல்  என்ற தலைப்பு கொண்ட இப்பாடலை அனைத்துக் காதலர்களுக்குமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நானும் ரவுடிதான் என்ற படத்தில் விஜய் சேதுபதி-நயன்தாரா ஜோடிக்கு அனிருத்தின் இசை துள்ளளாக அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்த நிலையில். இவர்கள் இணைந்து நடித்துவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நாளை ரிலீஸாகவுள்ள பாடல் காதலவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் சிங்கில் வெளியாகுமெனத் தெரிவித்துள்ளார்.
 
மேலும், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் அனிருத் இசையமைத்துள்ள பாடல் நாளை ரிலீசாகவுள்ள நிலையில் அனிருத் பியானோவில் இசையமைப்பது போன்ற ஒரு புதிய புகைப்படத்தை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இது வைரலாகிவருகிறது.