உதயநிதியின்''ரெட் ஜெயிண்ட் மூவிஸ்'' ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகரும் தயாரிப்பாளருமான உதய நிதி ஸ்டாலினில் நிறுவனம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ். இந்த நிறுவனம் சார்பில் விஜய்யின் குருவி, சூர்யாவின் ஆதவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
சமீபத்தில், கமல் தயாரித்து நடித்த விக்ரம் படத்தை உதய நிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிட்டிருந்தது. இப்படத்திற்கு நல்ல வசூல் குவித்ததை அடுத்து, கமல்- ஷங்கரின் இணைந்து உருவாகி வரும் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்கவுள்ளதாக உதய நிதி தெரிவித்தார்.
இப்படம் சம்பந்தமாக அமெரிக்கா சென்றுள்ள கமல், அங்கு மேக்கப் மேனை சந்தித்துப் பேசினார். எனவே இப்படம் சம்பந்தமாக புதிய அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது,. அதில், இன்று நள்ளிரவு 12:1 க்கு புதிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
ஒருவேளை இந்தியன்-2 பட அறிவிப்பாக இருக்கலாம் அல்லது வேறுஎதாவது படத்தின் அறிவிப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.