திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 15 ஜூன் 2017 (10:10 IST)

மீண்டும் திருமண ஆசையில் அமலா பால்

பிஸியாக படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அமலா பாலுக்கு மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளும் ஐடியா உள்ளதாம்.


 

 
அமலா பால், ஏ.எல்.விஜய் இடையே 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் அமலா பால் தொடர்ந்து படங்களில் நடித்தார். இதையடுத்து கணவன், மனைவி இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். 
 
விவாகரத்துக்கு பின் அமலா பால் படங்களில் பஸியாகிவிட்டார். தமிழ், மலையாளம் என கைநிறைய படங்களை வைத்துக்கொண்டு நடித்து வருகிறார். தனியாக பயனம் செய்வது புதிய நம்பிக்கை அளிப்பதாக கூறியுள்ளவர், மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் ஐடியா உள்ளது என தெரிவித்துள்ளார்.