வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 19 ஜூன் 2020 (09:08 IST)

அழகழகா போஸ் கொடுக்கும் ஆல்யா மகள் - இணையத்தை கலக்கும் குட்டி பப்பு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா இருப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு 'ஐலா சையத்' என பெயரிட்டிருக்கும் ஆல்யா அடிக்கடி செல்ல மகளின் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஐலா செம கியூட்டாக போஸ்  கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

She made my day