திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (16:37 IST)

எல்லா பிரச்சனையும் சக்தியினாலதான்; தயதுசெய்து யாரும் ஓட்டு போடாதீங்க: ரைசா வேண்டுகோள்!!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ரைசாவை தவிர அனைத்து போட்டியாளர்களும் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். நேற்று வையாபுரி பிக்பாஸ் வீட்டில் தொடர்வதாக பிக்பாஸ் அறிவித்தார். போட்டியின் ஆரம்பத்தில் இருந்த பரபரப்பு இப்போது ரசிகர்களிடம் இல்லை என்றே சொல்லலாம். ஓவியா வெளியே வந்தது ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

 
இந்நிலையில் இன்று வந்துள்ள ப்ரொமோ வீடியோவில் பலவீனமான போட்டியாளர்கள் நீங்களும் வையாபுரியும்தான் என்று  சக்தி கூறுவதாக ஆரவ் ரைசாவிடம் சொல்கிறார். மேலும் எந்த விஷயத்தில் நான் வீக்குனு புரியல.. அப்படியே எனக்கு கடுப்பானது என்று கூறுகிறார். அதற்கு ரைசா ஓவியா எனக் கூற, அது ஒரு வீக்கா என்று கேட்கிறார் ஆரவ்.
 
இதனை தொடர்ந்து சிநேகன் ரைசாவிடம் காயத்ரி இல்லாம சக்தியோ, சக்தி இல்லாம காயத்ரியோ இந்த வீட்டில தனியா ஒரு  வாரம் கூட இருக்க முடியாது என கூறுகிறார்.
 
ரைசா சிநேகனிடம் பேசிகையில், எல்லா பிரச்சனையும் சக்தியினாலதான் வருகின்றது. தயதுசெய்து அவருக்கு யாரும் ஓட்டு  போடாதீங்க. அவர்னாலெ எனக்கு வீட்டல இருக்கவே பயமாக உள்ளது. அடுத்து என்ன பிரச்சனையை கொண்டு வரப்போகிறார்கள் என்றே தெரியவில்லை என்று கூறுகிறார்.