Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (18:39 IST)
அஜித் கேரக்டரில் நடிக்கும் ரஜினி வில்லன்
அஜித்தின் ‘வீரம்’ ஹிந்தி ரீமேக்கில், அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான முதல் படம் ‘வீரம்’. 2014ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில் தமன்னா ஹீரோயினாகவும், சந்தானம் காமெடியனாகவும் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றி, ஹிந்தியில் ரீமேக் செய்யும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது. ‘2.0’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள அக்ஷய் குமார், ஹிந்தி ரீமேக்கில் நடிக்கிறார். சமூகக் கருத்துள்ள படங்களில் நடித்துவரும் அக்ஷய், ஒரு மாஸ் கமர்ஷியல் படம் பண்ண ஆசைப்பட்டாராம். அப்படி அமைந்த படம்தான் ‘வீரம்’. அடுத்த வருட தொடக்கத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்கிறார்கள். அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரான சஜித் இந்தப் படத்தை இயக்குகிறார்.