சூர்யாவின் கங்குவா படத்தை பார்த்த அஜித்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால் கங்குவா திரைப்படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படமான தங்கலான் படம் முதலில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிறுத்தை சிவா அடுத்து இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.
அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தை அஜித் பார்த்து இயக்குனர் சிவாவைப் பாராட்டியுள்ளாரம். இதைக் கங்குவா படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.