வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (14:16 IST)

ஷுட்டிங் மோடுக்கு ரெடியான அஜித் – ஆனால் ஹிரோயின் ?

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்னும் கதாநாயகி முடிவாகமலேயே இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்- ஹெச் வினோத்- போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் கதையைதான் வினோத் அஜித்திடம் முதலில் சொன்னார். ஆனால் அஜித் நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின் இந்த படத்தை செய்யலாம் எனக் கூறினார். சொன்னது போல வினோத்துக்கு இரண்டாவது படம் கொடுத்துள்ளார்.

ஒருமாதத்துக்கு முன் பூஜை போடப்பட்ட இந்த படம் இப்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. ஆனால் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.