உலகம் முழுக்க பைக்கில் சுற்ற திட்டம்! – சாகச பெண்ணிடம் ஐடியா கேட்கும் அஜித்!
டெல்லி சென்றுள்ள நடிகர் அஜித் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றி வர சாகச பெண்ணிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது வைரலாகியுள்ளது.
நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் கொரோனா காரணமாக பல ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது முழு பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தபோது அங்கு நடிகர் அஜித் பைக்கிலேயே 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற அஜித் அங்கு தாஜ்மஹால் அருகே ரசிகர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் 7 கண்டங்களில் 64 நாடுகளில் பைக்கிலேயே பயணம் செய்த சாகச பெண்மணியான மாரல் யாசர்லூவை நேரில் சந்தித்துள்ளார். அவரிடம் பயண அனுபவங்கள் குறித்து கேட்டறிந்த அஜித்குமார் பைக்கில் உலகம் முழுவதும் பயணிப்பதற்கான ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டுள்ளார்.