செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (11:02 IST)

”விடாமுயற்சி”யுடன் கால்பந்து விளையாடும் அஜித்குமார்! – அப்டேட் கேட்ட ரசிகர்கள் வருத்தம்!

Ajithkumar
நடிகர் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்துக் கிடக்கும் நிலையில் அஜித்குமார் தொடர்ந்து பயணம், விளையாட்டு என பிஸியாக இருக்கிறார்.



தமிழ் சினிமாவில் நவீன கால இளைஞர்களிடையே அதிகமான ஆதரவை பெற்ற நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்குமார். இருவருமே தங்களது கெரியரில் செம பீக்கில் உள்ள இந்த நேரத்தில் சினிமா பங்களிப்பை குறைத்துக் கொண்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஜய் அரசியலில் இறங்கியதால் சினிமாவை கைவிடும் நிலையில், நடிகர் அஜித்குமாரோ இரண்டு ஆண்டுக்கு ஒரு படம் என்ற லெவலிலேயே படம் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பதாக வெளியான விடாமுயற்சி அறிவிப்பு வெளியாகி ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் படப்பிடிப்பு முடிந்தபாடில்லை. படப்பிடிப்பு அப்டேட்கள் எதுவும் வெளியாகாவிட்டாலும் அஜித்குமார் ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பும் முடிந்து எங்கேயாவது சுற்றுலா செல்லும் புகைப்படங்கள்தான் அவரது ரசிகர்களுக்கு அப்டேட்டாக கிடைத்து வருகிறது.


தற்போது அஜர்பைஜானில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீண்டும் பயணம் புறப்பட்டுள்ளார் அஜித்குமார். தற்போது அவர் கால்பந்து மைதானம் ஒன்றில் சிறுவர்களோடு கால்பந்து விளையாடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

“மைதானத்தில் மட்டுமா கால்பந்து விளையாடுறார்.. எங்கள் மனசையும் அல்லவா கால்பந்தாக விளையாடுகிறார்” என அப்டேட்டுக்கு காத்திருக்கும் ரசிகர்கள் உள்ளுக்குள் வருந்துகிறார்களாம்.

Edit by Prasanth.K