வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (02:03 IST)

'நாட்டாமை ரீமெக்கில் அஜித்தா? விஜய்யா? சரத்குமார் பதில்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்த 'நாட்டாமை' திரைப்படம் அவரது திரையுலக வாழ்வில் மறக்க முடியாத படம். சூப்பர் ஹிட் ஆன இந்த படம் சரத்குமாரின் அரசியல் வாழ்க்கைக்கும் அடிகோலியது என்று கூறினால் அது மிகையாகாது.



 
 
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'நாட்டாமை' படத்தை தற்போது ரீமேக் செய்தால் அஜித், அல்லது விஜய் இவர்களில் யார் பொருத்தமாக இருப்பார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், 'அஜித்துக்கு அந்த கேரக்டர் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்' என்று கூறினார்.
 
இந்த கேள்வி செயலி ஒன்றின் மூலம் சர்வே எடுக்கப்பட்ட போது அஜித்துக்கு 71% வாக்குகளும் விஜய்க்கு 29% வாக்குகளும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.