1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2017 (21:54 IST)

அஜித்தின் 'விவேகம்' ரூ. 50 கோடி முதல் ஏலம்?

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விவேகம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதால் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை வியாபாரம் செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது.



 


அஜித் இதுவரை நடித்திராத இண்டர்நேஷனல் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பது, முதன்முதலாக ஜோடி சேரும் காஜல் அகர்வால், படத்தின் முக்கால்வாசி படம் வெளிநாட்டில் படப்பிடிப்பு, விவேக் ஓபராய் முதன்முறையாக தமிழில் வில்லன் அறிமுகம், முதல்முறையாக கமல் மகள் அக்சரா நடிக்கும் படம், அனிருத்தின் அட்டகாசமான இசை ஆகிய பல பாசிட்டிவ்கல் இந்த படத்தில் இருப்பதால் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற '2.0, பாகுபலி போன்ற படங்களுக்கு இருக்கும் மவுசு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தின் ஆரம்பவிலை ரூ.50 கோடி என்று ஏலத்தை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. பல முன்னணி விநியோகிஸ்தர்கள் இந்த படத்தின் உரிமையை பெற போட்டி போடுவதால் இந்த படத்தின் தமிழக வியாபாரம் ஒரு சாதனையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.