செவ்வாய், 4 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : திங்கள், 3 மார்ச் 2025 (18:47 IST)

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? வேகமாக பரவி வரும் வதந்தி..!

தனுஷ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை தனுஷ் தயாரிக்க இருப்பதாகவும் ஒரு செய்தி மிக வேகமாக இணையதளங்களில் பரவி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது முழுக்க முழுக்க வதந்தி என அஜித் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
 
நடிகர் தனுஷ் தற்போது நடிப்பை விட, இயக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்  ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் இயக்கினார். மேலும், அவர் இட்லி கடை என்ற படத்தை இயக்கி, அதில் நடித்தும் வருகிறார். இதன் பின்னர், இன்னொரு படத்தையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில்தான் தனுஷ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது. ஆனால், அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என்று அஜித் தரப்பினர் கூறி வருகின்றனர். உண்மையில் தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிப்பாரா? அல்லது இது வெறும் வதந்தி தானா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva