1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : சனி, 20 மே 2017 (16:48 IST)

அதுக்கு ஒத்துக்கொள்வார்களா அஜித்தும், விஜய்யும்?

விஷால் எடுத்துள்ள புதிய முடிவிற்கு, கமல், ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் ஒத்துக்கொள்வார்களா என்று கேள்வி எழுப்புகின்றனர் கோடம்பாக்கத்தினர்.


 


ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் என அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை, விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு படத்தில் கமிட்டானால், மொத்த சம்பளத்தில் பாதியை அட்வான்ஸாகத் தந்துவிட வேண்டும் என்பது இவர்களின் எழுதப்படாத விதி.

உதாரணமாக, ஒருவர் 40 கோடி சம்பளம் வாங்கினால், 20 கோடியை அட்வான்ஸாகத் தரவேண்டும். ஆனால், அந்தப் படத்தின் ஷூட்டிங் ஆறு மாதங்கள் கழித்து கூட தொடங்கலாம். அதைவிட, எப்போது ரிலீஸ் என்பதே தெரியாது. இதனால், வட்டிக்கு வாங்கி படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், வட்டியாகவே பெரும் தொகையை அழவேண்டி இருக்கிறது.

இதற்குத்தான் அதிரடி முடிவொன்றை எடுத்திருக்கிறார் விஷால். யாராக இருந்தாலும், இரண்டு கோடிக்கு மேல் அட்வான்ஸ் வாங்கக் கூடாது என்று உத்தரவு போடப்போகிறாராம். இதனால், தயாரிப்பாளர்கள் தேவையில்லாமல் வட்டி கட்டுவது குறையும் என்று நினைக்கிறாராம். இந்த முடிவுக்குப் பல தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்களாம்.