'லால் சலாம்’ படப்பிடிப்பு தொடங்கியது.. லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ஜீவிதா இந்த படத்தில் ரஜினியின் சகோதரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்திற்காக திருவண்ணாமலையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இந்த தகவலை லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது.
'லால் சலாம் படப்பிடிப்பு தொடங்கியது.. லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Edited by Siva