திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 31 ஜூலை 2017 (22:59 IST)

எத்தனை தடவை வேணும்னாலும் நாமினேட் பண்ணுங்கடா? காப்பாத்த நாங்க இருக்கோம்! ஓவியா ஆர்மி அதிரடி

பிக்பாஸ் வீட்டில் வெளியேறும் நபரை நாமினேட் செய்யும் நாள் இன்று என்பதால் அனைவரும் கன்ஃபக்ஷன் அறைக்கு சென்று நாமினேட் செய்தார்கள். 



 
 
வழக்கம்போல் ஓவியா ஜெயித்துவிடுவாரோ என்ற பொறாமையில் கிட்டத்தட்ட அனைவருமே ஓவியா வெளியே செல்ல வேண்டும் என்று நாமினேட் செய்தார்கள். அனைவரும் எதிர்பாராத திருப்பமாக ஆரவ் கூட ஓவியாவை நாமினேட் செய்தார்.
 
காயத்ரி, ஜுலி செய்யும் அட்டகாசங்கள் எதுவுமே ஆரவ் கண்ணுக்கு தெரியவில்லையாம், ஒரே ஒரு நாள் ஓவியா ஜூலியை வெறுப்பேற்றியதால் ஓவியா மாறிவிட்டதாக ஆரவ் நாமினேட் செய்துள்ளார்.
 
ஆனால் நாமினேட் செய்வது மட்டும்தான் உங்கள் வேலை. காப்பாற்றுவது எங்கள் வேலை என்று ஓவியா ஆர்மியினர்களும், ஓவியா படையினர்களும் ஓட்டுக்களை பதிவு செய்ய கிளம்பிவிட்டனர். எனவே ஓவியா இந்த வாரமும் காப்பாற்றப்படுவார் என்பது உறுதி. வெளியே போவது வையாபுரியா அல்லது ஜூலியா என்பதை வரும் சனி வரை பொறுத்திருந்து பார்ப்போம்