அஜித், விஜய்யை அடுத்து அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்ற விக்ரம்
தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் வெற்றிப்படமான 'வீரம்' மற்றும் இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' ஆகிய படங்கள் உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளார்.
விஜயா புரடொக்சன்ஸ் மற்றும் விக்ரம் இணையும் இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார். 'கவண்' வெற்றிப்படத்திற்கு பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள இந்த அதிரடி ஆக்சன் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது
மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மிக விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது