பாட்டை கேட்டவுடன் 'கோ கோ' படத்தை பார்க்க ஆசைப்பட்ட பாலிவுட் பிரபலம்

VM| Last Updated: செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (11:22 IST)
அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது  'கோலமாவு கோகிலா'.  இத்திரைப்படம் ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த  படத்தின் விளம்பர பாடலான 'கண் இன் காதல்' பாடலை இரு நாட்களுக்கு முன்பு படக்குழுவினர் வெளியிட்டனர்.
 
இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ள இப்பாடல் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தற்போது ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 படபிடிப்பில் மிக பிஸியாக  இருக்கிறார்.
 
இந்நிலையில் இப்பாடல் குறித்து கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதில்,  'இவ்வளவு கூலான கண் இன் காதல்' பாடலை பார்த்துவிட்டு, தென்னிந்தியாவின் பிளாக் பஸ்டர் திரைப்படமான கோலமாவு கோகிலா-வை காண வேண்டுமென மிக ஆவலுடன் இருக்கிறேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :