பாரதிராஜாவை அடுத்து D44 படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்!
தனுஷ் நடிக்கவிருக்கும் 44வது திரைப்படமான D44 என்ற திரைப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இணைந்தார் என சற்றுமுன் தகவல் வெளியான நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் இணைந்துள்ளார்
தனுஷின் D44 படத்தில் படத்தை பிரபல இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார் என்பதையும் அனிருத் இந்த படத்தில் இசையமைக்க உள்ளார் என்பதையும் பார்த்தோம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்புகள் இன்று வெளியாகி கொண்டிருக்கின்றன
முதல்கட்டமாக இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இணைந்துள்ளார் என்று அறிவித்த நிலையில் தற்போது பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தனுசுடன் ஏற்கனவே பிரகாஷ்ராஜ் திருவிளையாடல் ஆரம்பம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் மீண்டும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இன்னும் வேற யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்