மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!
இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.
மேலும் சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த அதிதி, மாவீரன் படத்தில் பத்திரிகை நிரூபராக நடித்து வித்தியாசத்தைக் காட்டினார்.
அடுத்து 7 ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் சமூகவலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. தற்போது புடவையணிந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரல் ஆகியுள்ளது.