1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:10 IST)

போதைக்கு அடிமை? இளம் நடிகர்கள் மீதான தடை நீக்கம்!

Shaun Nigam and Srinath
மலையாள சினிமாவில் இளம் நடிகர்களாக ஷான் நிகம், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
 

மலையாள சினிமாவின் இளம் நடிகர்கள் ஷான் நிகம், ஸ்ரீ நாத் பாசி. இவர்கள் சினிமா ஷூட்டிங்கின்போது படப்பிடிப்பிற்கு போகாமலும், அப்படி வந்தாலும் போதையில் வருவதாகவும் படக்குழுவினருக்கு போதிய ஒத்துழைப்பு தருவதில்லை என்று புகார் எழுந்தது.

இந்த புகார்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வந்த நிலையில், இரண்டு நடிகர்களும் சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டதுடன், சினிமாவில் போதைக்கு அடிமையானவர்கள் பற்றி காவல்துறையில் தகவல் கொடுப்போம் என்று கூறினர்.

இது மலையாள சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இளம் நடிகர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில்,  நடிகர்கள் ஷான் நிகம், ஸ்ரீ நாத் பாசி ஆகியோர் மலையாள தயாரிப்பாளர் சங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் எழுதினனர். இதை பரிசீலனை செய்த தயாரிப்பாளர் சங்கம் அவர்கள் இருவரும் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டி தடையை நீக்கியுள்ளனர்.