1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2016 (10:42 IST)

அடக்குனா அடங்குற ஆளா அமலா பால்...

ஏ.எல்.விஜய், அமலா பால் விவாகரத்துக்கு மனு அளித்திருக்கிறார்கள். இவர்களின் திருமண முறிவுக்கு இருவரில் யாராகவும் காரணமாக இருக்கலாம். ஆனால், மீடியாவிலும், சமூகவலைத்தளித்திலும் அமலா பால்தான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.


 
 
அமலா பாலின் தனிப்பட்ட வாழ்க்கையை இணையத்தில் பிரித்து மேய்ந்தார்கள். இப்படியொரு உளவியல் தாக்குதலுக்கு எந்தப் பெண் ஆளானாலும், துவண்டு போவார்கள். ஆனால், அமலா பால் அப்படியில்லை.
 
சென்னையில் நடந்த செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் அறிமுக விழாவில் அமலா பால் முகம் நிறைய சிரிப்புடன் கலந்து கொண்டார். 
 
நட்சத்திர கிரிக்கெட்டைப் போன்று பேட்மிண்டன் போட்டிகளும் சென்னை, ஐதராபாத், கொச்சி, பெங்களூரு ஆகிய ஊர்களில் நடைபெறவிருக்கிறது. இறுதிப்போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது. 
 
இதில், சென்னை அணி சார்பில் விளையாடும் வீரர்களின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. 
 
இந்த அணியில் நடிகர் ஆர்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பரத், பிரசன்னா, அபிநய் வட்டி, அமிதாஷ், முன்னா, சாந்தனு, வைபவ், காயத்ரி, இனியா, ரூபா மஞ்சரி ஆகியோரும் விளையாடுகிறார்கள்.
 
இந்த அணியின் விளம்பர தூதராக மாதவன் பொறுப்பேற்றுள்ளார். அணியின் ஊக்குவிப்பாளராக அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களை நடிகரும், நடிகர் சங்க தலைவருமான நாசர் அறிமுகம் செய்து வைத்தார். 
 
இந்த விழாவில் அதே பழைய உற்சாகத்துடன் கலந்து கொண்ட அமலா பாலைதான் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.