வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 25 டிசம்பர் 2024 (14:00 IST)

என் மகன் இறந்துவிட்டான்.. துயர செய்தி ட்விட்டரில் பகிர்ந்த நடிகை திரிஷா

நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகன் இறந்து விட்டதாக வருத்தத்துடன் கூறியுள்ளதை அடுத்து, ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.

 தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷா தற்போது கமல்ஹாசன், அஜித், மோகன்லால், சிரஞ்சீவி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அஜித்துடன் அவர் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது மகன் ஜோரோ கிறிஸ்துமஸ் தினத்தில் காலை உயிரிழந்து விட்டான். என்னை நெருக்கமாக அறிந்தவர்களுக்கு இனி என் வாழ்க்கை ஒரு துளி அர்த்தமும் இல்லாத ஒன்று என்பது நன்கு தெரியும்," என்று தெரிவித்துள்ளார்.

அவர் தனது மகன் என்று குறிப்பிட்டது, அவர் ஆசையாக வளர்த்து வந்த நாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், "நானும் எங்கள் குடும்பத்தாரும் ஜோரோ மறைவால் உடைந்து விட்டோம். நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். இன்னும் சிறிது காலம் பணியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு ரேடாரிலிருந்து விலகி இருப்பேன்," என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து, ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva