1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (22:11 IST)

ஜிஎஸ்டிக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்த ஒரே நடிகை

ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது மத்திய அரசின் சம்பந்தப்பட்டது என்பதால் மோடி அரசை எதிர்த்து பிரபல நடிகர்களே குரல் கொடுக்க தயங்கி வருகின்றனர். ஒருசிலர் குரல் கொடுத்தாலும் மாநில அரசின் கேளிக்கை வரியைத்தான் நீக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.



 
 
மத்திய அரசை பகைத்து கொண்டால் அடுத்த நாள் என்ன நடக்கும் என்பது தெரியும் என்பதால் ரஜினி, கமல், விஜய், கூட வாயை திறக்கவில்லை. அஜித் எப்போதுமே திறந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தைரியமாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்த சாயிஷா அரசுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். வனமகன்' நாயகியான இவர் ஜிஎஸ்டி குறித்து தமது டுவிட்டரில் கூறியபோது, 'மிகப்பெரிய வரி என்பது மிகப்பெரிய சோதனை. திரையரங்கு வேலைநிறுத்தம் துரதிஷ்டமானது, சமீபத்தில் ரிலீஸ் ஆன படங்களின் நிலையோ பரிதாபமானது என்று கூறியுள்ளார். 
 
இந்த வரிவிதிப்பை ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டால்தான் ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதும் அனைத்து திரையுலகினர்களும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.