திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (15:55 IST)

ஒரு வாரத்துக்கு மௌன விரதம்… நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு!

நடிகர் பிரகாஷ் ராஜ் தனது குரல்வளைக்கு ஓய்வளிப்பதற்காக ஒரு வாரம் மௌன விரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி எல்லா தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகராக பிஸியாக வலம் வந்து கொண்டிருந்தாரோ அதுபோல இப்போது மறுபடியும் பிஸியான நடிகராகியுள்ளார். இப்போது 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் அவர், தீபாவளிக்கு தமிழில் ரிலிஸ் ஆகும் 3 படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

இப்போதும் பல புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘ மருத்துவரிடம் முழு பரிசோதனை செய்துகொண்டேன். நலமாக உள்ளேன். என்னுடைய குரல்வளைக்கு மட்டும் ஒரு வாரம் ஓய்வளிக்க சொல்லி இருக்கிறார்கள். அதனால் ஒரு வாரம் மௌன விரதம் இருக்கப் போகிறேன்’ எனக் கூறியுள்ளார்.