வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (17:23 IST)

தமிழ்நாட்டில் இன்னொரு சுஷாந்தைப் பார்க்க விரும்பவில்லை – பிக்பாஸ் தடை குறித்து ஓவியா பதில்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை விதிக்கலாமா என்ற கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதில் அளித்த ஓவியா அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பிக்பாஸ் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது நடிகை ஓவியா தான். பிக் பாஸ் டைட்டில் வின்னர்களான ஆரவ், ரித்விகா மற்றும் முகின் ஆகியோர்களை விட நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய ஓவியா பெரும்புகழ் பெற்றுள்ளார் என்பதும் அவருக்குத் தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் ஓவியா ’பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யலாமா? என்ற ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். ஓவியாவின் இந்த டுவிட்டுக்கு பல்வேறு பதில்களை நெட்டிசன்கள் அளித்து வருகின்றனர். பிக்பாஸ் இல்லை என்றால் நீங்கள் இந்த அளவுக்கு எப்படி புகழ்பெற்று இருக்க முடியுமா? என்று சிலரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரை டார்ச்சர் செய்வதால் தடை செய்யலாம் என்றும் பலர் கூறி வருகின்றனர் .

இதனால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் தடை செய்ய சொல்லவில்லை. அவர்கள் குறைந்தபட்ச கருணையுடனாவது நடந்துகொள்ள வேண்டும் என்றே கருதுகிறேன்’ என்றும் ‘நான் இன்னொரு சுஷாந்தை தமிழ்நாட்டில் பார்க்க விரும்பவில்லை. விடுங்க.. என் தவறுதான்’ எனக் கூறியுள்ளார்.