வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 5 பிப்ரவரி 2022 (16:13 IST)

என் தெய்வத்துக்கு பிறந்தநாள்... அம்மாவை வாழ்த்திய நடிகை மீனா - வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தொடர்ந்து ஹிட் ஹீரோக்களின் படங்களில் நடித்து 80ஸ் காலத்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார். பவ்யமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்த மீனா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 
 
இவர் கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்ற எஞ்சினியரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற கியூட்டான மகளும் இருக்கிறார். பேபி நைனிகா விஜய்யின் தெறி படத்தில் நடித்து நட்சத்திர குழந்தை நடிகையானார். 
 
இந்நிலையில் தற்போது நடிகை மீனா தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்பமொன்றை வெளியிட்டு " என் தெய்வத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  என் பலம் என் உத்வேகம்... என் அம்மா !! என கூறி பதிவிட்டுள்ளார். அவருக்கு ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.